Monday, October 21, 2013

புரிந்து கொள்ள வேண்டும் கண்ணே புரிந்து கொள்ள வேண்டும்
இயற்கையோடு வாழும் நாம் இயற்கையை புரிந்து கொள்ள வேண்டும்
நண்பர் யார் நல்லவர் யார், பகைவர் யார், துன்பம் அளிப்பவர் யார்
என்பதை நன்கு புரிந்து நடக்க வேண்டும் கண்ணே நடக்க வேண்டும்
விதி முறைகளை மதிக்க எண்டும் கண்ணே விதிமுறைகளை ...
மதிக்க வேண்டும். விதி முறை மீறுபவர்களின் செயல்களுக்கு முன்பு
நம்மை காத்து கொள்ள வேண்டும் கண்ணே நம்மை காத்து கொள்ள வேண்டும்.
தேவைகள் அறிந்து நடக்கவேணும், கண்ணே மற்றும்
நமக்கு ஏற்படும் இடரில் இருந்தும் காத்துக்கொள்ள வேணும்.

நன்மை தரும் ஏழு விடயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விடயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விடயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

No comments:

Post a Comment