இறைவனிடம் கையேந்துங்கள்
இன்று ஏனோ மூத்த முஸ்லிம் இசை முரசு நாகூர் ஹனீபா நினைவுக்கு வர நான் சிறு வயதினில் மிகவும் அனுவித்து ரசித்த இந்த இஸ்லாமிய கலைஞர் பாடல் நினைவிற்கு வர பதிவு செய்கின்றேன். மிகவும் ஆழமானக கருத்துகள் நிறைந்த பாடல்.
இவரது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். பிற்காலத்தில் குடியேறியது, கலை நகரமான நாகூர்! ஆரம்பத்தில் பாடியது புலவர் ஆபிதீனின் பாடல்களை. 40-களில், பிரபல லுங்கி வர்த்தகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்றவர் மணமேடையைத் தனது பாடலால் ஈர்த்து தனக்கென்று அங்கீகாரம் பெற்றார்....
“”எட்டுக் கட்டைக்கு மேலாக ஒலிக்கும் இவரது குரல் கிட்டப்பாவைத் தோற்கடிக்கும். தனது குரல் முரசால் இசை முரசு என்ற பட்டம் பெற்றவர்!” என்று புகழ்ந்துரைக்கிறார் “”செüந்தர்ய முத்திரை” கவிராயர் முஸ்லிம் மதங்களையும் தாண்டி “பரம்பொருள் ஒன்று! அவனிடமே சரணடையுங்கள்!’ என்று நம்பிக்கையாளர்களுக்கு தெம்பூட்டியவர். இத்தனை சிறப்புக்கும் உரியவர்தான் இசை முரசு நாகூர் ஹனீபா.
குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனகர்த்தர், சோமசுந்தர தம்பிரான் ஆகியோரின் மடங்களிலும் கூட இசை முரசுவின் பக்தி மணக்கும் பாடல்கள் ஒலிக்கும். “”இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!” -என்ற பாடல் பல கோயில் திருவிழாக்களிலும், மார்கழி மாதங்களின் அதிகாலைப் பொழுதுகளிலும் பல கோயில்களில் ஒலிக்கும். இதற்கு பாடலாசிரியர் கிளியனூர் அப்துல் சலாம் (மயிலாடுதுறை) ஒரு காரணம் என்றால், அதற்கு உயிரூட்டிய ஹனீபாவும் மற்றொரு காரணம்.
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை முடுவதில்லை..
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்..
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்..
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்..
எண்ணங்களை இதயங்களைப் பார்கின்றவன்...
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளி தருபவன்..
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளி எரிப்பவன்..
பாசத்தோடு யாவரையும் பார்கின்றவன்..
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்..
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்..
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்..
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்..
அன்பு நோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்..
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை..
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்..
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்..
வாடும் இதயம் வளர்வதற்கு வழி வகுப்பவன்..
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிப்பவன்..
அலை முடங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்..
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்..
தலை வணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்..

No comments:
Post a Comment